2024 – ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்!

Photo of author

By Divya

2024 – ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்!

இந்த 2024 ஆம் ஆண்டு செல்வ செழிப்போடு வாழ கீழே கொடுப்பட்டுள்ள படி செய்யவும்.

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இதை செய்ய வேண்டும். எந்த நாளில் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.

காலை நேரத்தில் மஞ்சள், கல் உப்பு, துவரம் பருப்பு வாங்கி 3 சிறிய கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்து விடவும்.

மற்றொரு கிண்ணத்தில் சில நாணயங்களைப் போட்டு அதன் மீது பச்சைக் கற்பூரம் வைத்து பூஜை அறையில் வைத்து விடவும்.

பின்பு விளக்கு ஏற்றி தூப தீபம் காட்டி வழிபடவும். மாலை வரை அப்படியே வைத்து இருந்து மாலை 6 மணிக்கு இவைகளை எடுத்து துவரம் பருப்பை டப்பாவில் போட்டு கல் உப்பை ஜாடியில் போட்டு சில்லறைக் காசுகளை பணப் பெட்டியில் வைக்கவும்.

ஒரு சிறிய டப்பாவில் சிறிது சோம்பு, 3 ஏலக்காய், சிறிது பச்சைக் கற்பூரம் போட்டு மூடி பணப் பெட்டியில் வைத்து விடவும். முடிந்தவர்கள் அந்த டப்பாமூடியில் சிறிய 3 ஓட்டைகள் போட்டு வைக்கவும்.