இந்த ஒரு டீ மட்டும் குடிங்க!! உங்களுக்கு இடுப்பு வலியே வராது!!
முன்பெல்லாம் வயதானவர்களுக்கு அதுவும் ஒரு சிலருக்குத்தான் இடுப்பு வலி இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது இளம் வயதினரும் இந்த இடுப்பு வலியினால் அவஸ்தை படுகிறார்கள். இதற்கு காரணம் உடல் உழைப்பின்மை, நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தபடியே செய்யும் வேலைகள், நீண்ட தூரம் இரு சக்கர வாகன பிரயாணம் மூலம் இளம் வயதினருக்கும் சீக்கிரமாக இடுப்பு வலி வந்து விடுகிறது. இந்த இடுப்பு வலியை சரி செய்யக் கூடிய ஒரு சித்த மருத்துவ டீயை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுக்கு 1 சிறிய துண்டு
மிளகு 5
கிராம்பு 5
கொள்ளு 1 ஸ்பூன்
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் ½ ஸ்பூன் டீத்தூள் போட்டுக் கொள்ளவும். பிறகு மேலே கூறிய அனைத்து பொருட்களையும் அதில் போட்டுக் கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து 3 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் இறக்கி வடிகட்டவும்.
இதில் ருசிக்கு பனைவெல்லம் சேர்க்கலாம். அல்லது தேன் சேர்க்கலாம் இந்த டீயை குடிப்பதன் மூலம் இடுப்பு வலியை சரி செய்யலாம். இதை தினசரி குடிக்காவிட்டாலும், வாரத்தில் 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த டீ இடுப்பு வலிக்கு மட்டுமில்லாமல் சளி பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கிறது.