இதை மட்டும் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு ஆயுசுக்கும் கால்சியம் சத்து குறைபாடு வராது!

Photo of author

By Amutha

இதை மட்டும் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு ஆயுசுக்கும் கால்சியம் சத்து குறைபாடு வராது!

இன்றைய சூழலில் நிறைய பேருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை கால்சியம் சத்து குறைபாடு அதனுடன் சேர்ந்து இரும்பு சத்து குறைபாடு.

கால்சியம் சத்து நம் உடம்பில் குறைந்தால் எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூட்டு இணைப்புகள் பலம் இல்லாமல் போகும். மேலும் அதிக வலி உண்டாக்கும். கால்சியம் குறைபாடு இருந்தாலே சாதாரணமாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மதுப்பழக்கம்,புகைப்பிடித்தல் என ஆண்களுக்கும் மெனோபாஸ் பிரச்சினைக்குப் பிறகு பெண்களுக்கும் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படுகிறது. கால்சியம் சத்து குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு ஆகியவற்றை களைவதற்கு ஒரு எளிய வீட்டு வைத்தியம் பார்ப்போம்.

ஒரு கப் கேழ்வரகு மாவை ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். தானியங்களில் அதிக அளவு கால்சியம் கேழ்வரகில் தான் உள்ளது. கப் ராகி மாவில் நமக்கு 13 சதவீதம் கால்சியம் சத்து கிடைத்துவிடும். கேழ்வரகில் பாலில் இருப்பதை விட மூன்று மடங்கு அதிக கால்சியம் உள்ளது.

கேழ்வரகு மாவில் பச்சை வாடை போனதும் எடுத்து ஆறவிடவும். அடுத்து 50 கிராம் கருப்பு எள்ளு எடுத்து அதையும் வறுத்துக்கொள்ளவும். கருப்பு எள்ளிலும் அதிக அளவு கால்சியம் உள்ளது. இதையும் நன்றாக வறுத்து ஆற விடவும்.

ஆறிய பின்னர் எள்ளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதனுடன் ஒரு 15 பாதாம் பருப்பு,2ஸ்பூன் பெருஞ்சீரகம், இதை நன்றாக அடித்து பவுடர் செய்ததும் ஆற வைத்த ராகி மாவுடன் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து ஒரு காற்று போகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும். இது பல மாதங்களுக்கு கெட்டுப்போகாது.

2 ஸ்பூன் ராகி பவுடரை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கூழ் போல கலக்கவும். இதை ஒரு டம்ளர் சூடான பாலில் சேர்க்கவும். ராகி பவுடரை நேரடியாக பாலில் கலந்தால் நிறைய கட்டிகள் உருவாகும். எனவே சூடான தண்ணீரில் கலந்து விட்டு சேர்த்தால் கட்டிகள் உருவாகாது.

இதை குடிப்பதற்கு முன்பு ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து குடிக்கலாம். வெள்ளை சர்க்கரை கட்டாயம் சேர்க்க வேண்டாம். இதைத் தொடர்ந்து குடித்து வர நமக்கு 70 வயதானாலும் கால்சியம் குறைபாடு வரவே வராது.