இந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலே போதும்! உடல்ல இருக்க பாதி நோய் காணாம போய்டும்!
சீதாப்பழத்தில் கால்சியம் சத்து, வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாக உள்ளது.. இப்பழத்தில் நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்தும் , தாது உப்புகள், புரதம், கொழுப்பு,நார்ச்சத்து,இரும்புச்சத்து, பாஸ்பரஸ், போன்றவை இப்பழத்தில் உள்ளன. மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனைகளுக்கு சீதாப்பழத்தை சப்பிடிடுவதால் மூச்சுக்குழாய் உள்ள அழற்சி சரியாகும். மேலும் ஆஸ்துமா நோய் வாராமல் பாதுகாக்கும். சீதாப்பழம் உடலில் உள்ள சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் உடல் சோர்வுகளை குணப்படுத்தும் தன்மை இந்த சீதாப்பழத்திற்கு உள்ளது. குடற்புண் குணமாக சீதாப்பழத்துடன் சிறிது ஊற வைத்து எடுத்த வெந்தயத்தை சேர்த்து சாப்பிட்டால் குடற்புண் வெகு விரைவில் குணமாகும். சீதாப்பழத்தை உடம்பில் ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஊளைச்சதை குறையும். சீதாப்பழத்தை சாப்பிட்டால் விரைவில் செரிமானம் ஏற்படும். மேலும் சீதாப்பழத்தில் உள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தும்.
இதயம் சீராக இயங்கச் செய்யும் மற்றும் சீதாப்பழத்தை சாப்பிட்டால் இதயம் சம்பந்தமான எந்த நோய்களும் வராமல் இதயத்தை பாதுகாக்கும். சீதாப்பழத்தை அரைத்து சீதாப்பழச்சாறு குடித்து வந்தால் சருமதில் ஏற்பப்டும் வறட்சி நீங்கி சரும பொழிவு ஏற்ப்பட்டு சருமம் இயல்பு நிலைக்கு வரும். சீதாப்பழத்தில் சிறிதளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால் அதிகம் சாபிட்டால் விரைவில் சளி பிடிக்காது. சீதாப்பழ விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் பைத்த மாவு கலந்து தலை முடியில் தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாகும். பெண்களுக்கு பேன்கள் தொல்லை இருக்காது.