உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்!!

Divya

Updated on:

Remedy to get rid of poverty and keep your home office overflowing with money

உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்!!

வீட்டில் பணம்,நகையின் வரவு அதிகரிக்க அவசியம் லட்சுமி தாயாரின் அருள் இருக்க வேண்டும்.அதற்கு வீட்டை கோயில் போன்று வைத்துக் கொள்வது அவசியம்.அதுமட்டும் இன்றி வீட்டில் சில மாற்றங்களை கொண்டு வருதல்,சிலவற்றை தவறாமல் கடைபிடித்தல் மூலம் லட்சுமி கடாட்சத்தை பெருக்க முடியும்.

பிறரிடம் வாங்கிய பணத்தை செவ்வாய் கிழமை அன்று கொடுப்பது நல்லது.அதேபோல் பிறருக்கு கடன் கொடுக்குறீர்கள் என்றால் செவ்வாய் ஹோரையில் கொடுப்பது நல்லது.

கடவுளுக்கு சமமான அம்மி,உரல்,நிலை வாசல் மீது கால் வைப்பது,உட்காருவது போன்ற செயல்களை செய்யக் கூடாது.

வீட்டில் குத்து விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அதை அணைக்க கூடாது.அவை முழுமையாக எரிந்து அணைய வேண்டும்.இல்லையென்றால் மலர்களை கொண்டு அணைக்க வேண்டும்.

வீட்டில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள துணிகளை உடுத்த வேண்டாம்.செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை அன்று ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றி வழிபட்டு வந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கல் உப்பு,அரிசி,பருப்பு ஆகியவை தீர்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் வாசனை நிறைந்த சோம்பு,பட்டை,கிராம்பு,ஏலக்காய் ஆகியவற்றை பூஜை அறை மற்றும் சமயலறையில் எப்போதும் வைத்திருக்கவும்.