உங்கள் அக்குளில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இந்த ஒரு கல் போதும் எப்பேர்ப்பட்ட வியர்வை துர்நாற்றமும் நொடியில் மாயமாகி விடும்!!

0
122
#image_title

உங்கள் அக்குளில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இந்த ஒரு கல் போதும் எப்பேர்ப்பட்ட வியர்வை துர்நாற்றமும் நொடியில் மாயமாகி விடும்!!

கோடை காலத்தில் உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறும்.இதை தான் வியர்வை என்று அழைக்கின்றோம்.சிலருக்கு அக்குள்,தொடை இடுக்கு,அந்தரங்க பகுதியில் அதிகளவு வியர்வை வெளியேறும்.

இதனால் அந்த பகுதிகளில் அதிகளவு கெட்டை வாடை வீசும்.குளித்தாலும் அந்த வாடை வீசத் தொடங்கும்.சிலர் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த வாசனை பவுடர்,வாசனை திரவியம் போன்றவற்றை அங்கு பயன்படுத்துவார்கள்.

ஆனால் இவை தற்காலிக தீர்வே தவிர நிரந்தர தீர்வு இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே உடலில் வீசும் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியை அவசியம் பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)பச்சை பயறு
2)மஞ்சள் கிழங்கு
3)வேப்பிலை
4)பன்னீர் ரோஜா இதழ்
5)வெட்டி வேர்

செய்முறை:-

ஒரு கப் பச்சை பயறு,2 விரலி மஞ்சள் கிழங்கு,ஒரு கப் வேப்பிலை,அரை கப் பன்னீர் ரோஜா இதழ் மற்றும் ஒரு கைப்பிடி அளவு வெட்டி வேரை ஒரு காட்டன் துணியில் போட்டு ஒரு நாள் முழுவதும் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து பொடி செய்து கொள்ளவும்.இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

தினமும் குளிப்பதற்கு சோப் பயன்படுத்துவதற்கு பதில் இந்த பொடியை பயன்படுத்தி குளித்து வந்தால் உடலில் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.