ஒரே ஒரு சொட்டு மட்டும் போதும்… வெள்ளையாக இருக்கும் முடி கருப்பாக மாறிவிடும்…
நமக்கு இருக்கும் நரை முடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த இயற்கையா.முறையில் கூறப்படும் மருந்தை தயாரித்து நம் தலையில் தடவி 45 நிமிடங்கள் கழிந்து தலையை கழுவினால் முடி கருமையாக மாறிவிடும்.
இளநரை என்பது தற்போதைய காலத்தில் அனைவருக்கும் இருக்கின்றது. உடலில் நமக்கு சத்துக் குறைபாடு காரணமாகத்தின் நமக்கு இளநரை தோன்றுகின்றது. இதை தடுக்க செயற்கையான ஹேர் டை கிரீம்களை பயன்படுத்துவதை விட இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த மருந்தை பயன்படுத்தினால் எந்தவித தீமைகளும் இன்றி நமது தலைமுடி கருமையாக மாறிவிடும்.
இந்த இளநரையை தடுக்க நாம் எலுமிச்சையை மருந்தாக பயன்படுத்தவுள்ளோம். எலுமிச்சையுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து நரைமுடியை எவ்வாறு கருமையாக மாற்றுவது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்…
* நல்லெண்ணெய்
* தேங்காய் எண்ணெய்
* எலுமிச்சை
* சார்க்கோள் பவுடர்
செய்முறை…
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில்(பவுலில்) நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் எலுமிச்சம் பழத்தை வட்ட வட்டமாக அறுத்துக் கொள்ளவும். வெட்டிய இந்த எலுமிச்சம் பழத் துண்டுகளை இந்த எண்ணெயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதில் சார்க்கோள் பவுடர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இதை தலையில் தேய்த்து 45 நிமிடங்கள் கழிந்து தலையை கழுவினால் வெள்ளை முடி கருப்பாக மாறத் தொடங்கும்.