உங்கள் முடி அடர்த்தியாக வளர தலைக்கு 4 சின்ன வெங்காயத்தை பயன்படுத்துங்கள் போதும்..!!

Photo of author

By Divya

உங்கள் முடி அடர்த்தியாக வளர தலைக்கு 4 சின்ன வெங்காயத்தை பயன்படுத்துங்கள் போதும்..!!

நவீன காலத்தில் ஆண், பெண் என அனைவரும் சந்தித்து வரும் பொதுவான பிரச்சனை முடி உதிர்தல். இதற்கு உணவு மற்றும் நாம் வாழும் வாழ்க்கை முறை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

சிலருக்கு முடி வளர்ச்சி குறைவாக இருக்கும், சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும். எப்படி இருந்தாலும் சரி ஒரே மாதத்தில் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம் – 4

*செம்பருத்தி இலை – 15

*பச்சை பயிறு – 100 கிராம்

செய்முறை…

முதலில் ஒரு கிண்ணத்தில் 100 கிராம் பச்சை பயறை சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பின்னர் 15 செம்பருத்தி இலைகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அடுத்து 4 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் செம்பருத்தி இலைகளை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து ஊற வைத்துள்ள பச்சை பயிறை அதில் சேர்த்து அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பின்னர் தலைக்கு மைல்டான ஷாம்பு உபயோகித்து குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வருவதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.