முக அழகை கெடுக்கும் கருவளையங்கள் ஒரே வாரத்தில் மறைய “தேன் + மஞ்சள்” பயன்படுத்துங்கள் போதும்..!!

Photo of author

By Divya

முக அழகை கெடுக்கும் கருவளையங்கள் ஒரே வாரத்தில் மறைய “தேன் + மஞ்சள்” பயன்படுத்துங்கள் போதும்..!!

நம் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று கருவளையம். இதனால் முக அழகு கெடுவதோடு முகம் பொலிவற்று காணப்படும்.

கண் கருவளையம் ஏற்படக் காரணங்கள்:-

**அதிக வேலை சுமை

**முறையற்ற தூக்கம்

**வயது மூப்பு

**ஊட்டச்சத்து குறைபாடு

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

*பால் – 1 தேக்கரண்டி

*காபித் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் முகத்திற்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி மற்றும் காபித் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு 1 தேக்கரண்டி பால் சேர்த்து நன்கு குழப்பி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இதை கண் கருவளையத்தின் மீது போட்டு நன்கு மஜாஜ் செய்து கொள்ளவும். அரை மணி நேரத்திற்கு பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கண்களுக்கு கீழ் காணப்படும் அசிங்கமான கருவளையம் சில நாட்களில் மறைந்துவிடும். இதற்காக நாம் பயன்படுத்தும் பொருட்களால் நமக்கு எந்த இரு பக்க விளைவுகளும் ஏற்படாது.