இந்த ஒன்று மட்டும் பயன்படுத்துங்க.. முகப்பருக்கள் தழும்புகள் உடனே மறையும்!!

Photo of author

By Rupa

இந்த ஒன்று மட்டும் பயன்படுத்துங்க.. முகப்பருக்கள் தழும்புகள் உடனே மறையும்!!
நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சனை முகத்தில் முகப்பருக்கள், முகப்பருக்களின் தலும்புகள் ஆகியவை தான். இவை நம் முகத்தின் அழகை கெடுக்கின்றது. இந்த முக்கபருக்கள் வந்துவிட்டால் நாம் எதாவது ஒரு மருந்தை பயன்படுத்துவோம். இதனால் முகப்பருக்கள் மறைந்து தழும்பாக மாறிவிடும். பின்னர் இந்த தழும்புகளை மறைய வைக்க மேலும் மற்றொரு மருந்து எடுக்க வேண்டும். தழும்புகள் தற்காலிகமாக மறைந்து மீண்டும் முகப்பருக்கள் வரும்.
இந்த பிரச்சனையை நிரந்தரமாக நீக்க நாம் இந்த பதிவில் எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் ஒரு பொருளை பயன்படுத்தி  முகப்பருக்களையும், தழும்புகளையும் எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம்.
முகப்பருக்கள், தழும்புகள் அதனால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளை முழுவதுமாக நீக்க அவரைக் காயை மருந்தாக பயன் படுத்தலாம். இந்த பதிவில் முகப்பருக்களையும் அதனால் ஏற்படுகின்ற தழும்புகளையும் நீக்க எளிமையான வீட்டு வைத்திய முறையை தெரிந்து கொள்வோம்.
முகப்பருக்கள் ஏற்பட்ட நபர்கள் அவரை செடியின் இலைகளை எடுத்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த அவரை இலை விழுதை முகப்பருக்கள் உள்ள இடங்களில் பற்று மாதிரி போட வேண்டும். இதை திரும்ப திரும்ப செய்வதன் மூலம் முகப்பருக்கள் மறைந்து விடும். இந்த விழுதை புண்களுக்கு பயன்படுத்தினாலும் புண்கள் சரியாகி விடும்.
முகத்தில் தழும்புகள் உள்ள நபர்களும் இந்த அவரை இலையை அரைத்து தழும்புகள் உள்ள இடத்தில் பற்று மாதிரி தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் சில நாட்களிலேயே முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.
இந்த அவரைக்காயை நாம் உணவாக உற்கொள்ளும் பொழுது வாத நோய், வாயுப் பிரச்சனை, மூட்டு வலி, குதிகால் வலி ஆகிய அனைத்து வலிகளும் குணமாகும். இந்த அவரை இலையை அரைத்து அதை குதிகாலில் வலி உள்ள இடத்தில் வைத்து கட்டினால் குதி கால் வலி குணமாகும்.
எனவே அவரைக்காயை உணவில் அதிக அளவில் சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றது.