நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது – கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்!

0
231
#image_title

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது – கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்!

குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் பதவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சார்ந்த இளைஞர் ஒருவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றமில்லை என்றும் அதனை மற்றவர்களுக்கு பகிர்வதுதான் குற்றமேன்றும் தீர்ப்பு வழங்கி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தார்.

தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான குழு என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளித்திருந்தனர்.

இந்த மேல்முறையிட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சோனுசூட் தலைமையிலான அமர்வு, குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை என தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்க்கு கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரு தனி நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும், குழந்தைகள் ஆபாச வீடியோ குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறிய கருத்து கொடுமையானது என சாடினர்.

அதுமட்டுமல்லாது இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்தது தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Previous articleஹோட்டலில் மனிதனை போல சர்வராக வேலை செய்யும் ரோபோட்! இணையத்தில் வீடியோ வைரல்!
Next articleஇன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு!