வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி 20 தொடரை தவறவிடும் இந்தியவீரர்… லேட்டஸ்ட் தகவல்!

0
197

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி 20 தொடரை தவறவிடும் இந்தியவீரர்… லேட்டஸ்ட் தகவல்!

இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் கொரோனா தொற்று காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இதற்கிடையில் சிகிச்சையில் குணமான அவர் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இப்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

சமீபத்தில் கே எல் ராகுலின் திருமணம் பற்றிய தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. கே எல் ராகுல் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஒரு நாள் முன்பே வெளியான நானே வருவேன் அப்டேட்… மாஸாக வெளியான போஸ்டர்!
Next articleமஞ்சளை டீ போட்டு குடித்தால் இவ்வளவு நன்மையா? அதனுடன் இதையும் சேர்த்தால் ருசியோ ருசி!…