நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் படையப்பா. மேலும், அந்த படத்திற்கு பின் அரசியல் மாற்றங்கள் நடந்தது. ரஜினியின் கேரக்டரை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவான ரம்யா கிருஷ்ணனின் கேரக்டர்தான் நீலாம்பரி.
மேலும் சிவாஜி கணேசன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். அன்றைய தேதிகளில் அதிக வசூல் படைத்த நம்பர் ஒன் சாதனையை படைத்த படம் படையப்பா தான்.
மேலும் இந்த படத்திற்கு பின்னரே இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தளபதி விஜயை வைத்து மின்சார கண்ணா என்ற ஒரு படத்தை எடுத்து இருந்தார். ஆனால், படையப்பா அளவிற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட மின்சார கண்ணா தோல்வியை சந்தித்தது. அதற்கான காரணம் என்ன என்பதனையும் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
மேலும் படையப்பா போல ஒரு பிரமாண்ட படத்தை எடுத்துவிட்டு அடுத்ததாக ஒரு சாதாரண படத்தை எடுத்தால், அந்த படத்தின் முடிவு இவ்வாறுதான் இருக்கும் என்று உணர வைத்த படம் தான் மின்சார கண்ணா என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறினார். மேலும் படையப்பாவில் நீலாம்பரியாக மின்சார கண்ணா படத்தில் குஷ்புவின் கதாபாத்திரம் அமைந்து இருந்தது.
ஆனால், ரம்யாகிருஷ்ணன் அளவிற்கு குஷ்புவின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு இடையே எடுபடவில்லை. இதன் காரணமாக தன்னுடைய வெற்றியே தன்னுடைய தோல்விக்கும் காரணமாக அமைந்து விட்டது என்று அவர் கூறியிருந்தார்.
தற்போது டிவியில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மின்சார கண்ணா படம் நன்றாகத்தான் இருக்கிறது. ஏன் வெற்றி பெறவில்லை? என்ற நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.