நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் OTTயில் நாளை முதல் வெளியாக உள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதலே இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என்று கூறியுள்ளது.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அனல் பறக்கும் அரசியல் வசனங்கள், சமூகப் பிரச்சனைகளை ஆணித்தனமாக பேசும் கதாபாத்திரங்கள் என பல்வேறு காட்சிகளில் விஜய் சேதுபதியும், ஐஸ்வர்யா ராஜேஷும் மிரட்டி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் திரையில் கண்டுகளிக்க ஆவலுடன் காத்திருக்க இந்த படக்குழு இப்பொழுது நேரடியாக ஓடிடி தளத்தில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது.
திரையரங்குகளில் சில நாடுகளில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும் பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் டிரைவ்-இன் தியேட்டரில் க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் நாளை முதல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ஒரு முறை நீங்கள் ஜீ பிளக்ஸில் பார்க்க 199 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்….