திடீரென உதயமான கலியுக கிருஷ்ணர்!! 2 மனைவிகளுடன் பக்தர்களுக்கு பரவச காட்சி!!

Photo of author

By Amutha

திடீரென உதயமான கலியுக கிருஷ்ணர்!! 2 மனைவிகளுடன் பக்தர்களுக்கு பரவச காட்சி!!

Amutha

Kaliyuga Krishna who suddenly rose!! Ecstatic scene for devotees with 2 wives!!

திடீரென உதயமான கலியுக கிருஷ்ணர்!! 2 மனைவிகளுடன் பக்தர்களுக்கு பரவச காட்சி!! 

நான் தான் மகா விஷ்ணு என கூறிக்கொண்டு இரண்டு மனைவிகள் மற்றும் 5தலை பாம்பு படுக்கை என சாமியார் ஒருவர் ஏமாற்றி வருகிறார். அவரைப் பார்க்க கூட்டம் அலைமோதி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் தெலுங்கானா ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டிதொட்டி மண்டலத்தில் தனியாக ஆசிரமம் ஒன்றினை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதையடுத்து சந்தோஷ் திடீரென ஆசிரமத்திற்கு வந்த பக்தர்களிடம் தான் தான் பரமாத்மா, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் நானே, விஷ்ணு பகவானும் நானே எனக் கூறி திவ்ய தரிசனம் அளித்து வந்தார். இதனால் அவரின் தரிசனம் காண பக்தர்கள் கூட்டம் திரண்டு வந்தது.

மேலும் அவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதால் அவர்களை ஸ்ரீதேவி, மூதேவி எனக் கூறிய சந்தோஷ், 5 தலைகள் கொண்ட பாம்பு படுக்கையை அமைத்து அதில் படுத்துக் கொண்டு தனது மனைவிகள் படைசூழ பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.  மேலும் 3 நாட்களாக சாமியாரைப் பற்றி அதிகமான விளம்பரம் செய்யப்பட்டதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாமியாரைப் பார்க்க அதிக கூட்டம் திரண்டது. இதன் காரணமாக கடவாலா ராய்ச்சூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. மேலும் உண்மையான பகுண்டா வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் கூட இந்த தமிழக சாமியாரை காண கூட்டமாக குவிந்தனர்.

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக கே.டி.தொட்டி போலீசார் சந்தோஷ் சுவாமியை காவல் நிலையத்திற்கு .அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தான் மகா விஷ்ணு என 2மனைவிகள், பாம்பு படுக்கை என ஊரையே நம்ப வைத்த சாமியார் தற்போது போலீசின் விசாரணை வளையத்தில் உள்ளார். இந்த சம்பவம் தற்போது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.