கடந்த 25-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற 67வது திரைப்படத்துறைக்ககான தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட பலருக்கும் விருது வழங்கப்பட்டது.
மேலும், இந்திய சினிமா விருதுகளில் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வழங்கப்பட்டது. இதுவரை தமிழ் திரைத்துறையில் இயக்குனர், கே.பாலச்சந்தர், நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றுள்ளார்.
எனவே, அவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் என பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், ரஜினியின் சமகால நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான நடிகர் கமலஹாசன் இதுவரை ரஜினிக்கு எந்த ஒரு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
நடிகர் கமலஹாசன் வழக்கமாக கருத்து தெரிவிக்கும் டுவிட்டரில் கூட ஒரு ட்வீட் போட போடவில்லை. திரைத்துறையில் ரஜினியோடு ஒப்பிட்டால் கமலஹாசன் சிறந்த நடிகர் தான். இதை நடிகர் ரஜினியே பல மேடைகளில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஆனால், கமல் அப்படி ரஜினியை பார்க்கவில்லை தன்னைவிட ரஜினி அதிகம் வளர்ந்து விட்டாரோ என்ற எண்ணம் கமலுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
மிகவும் கஷ்டப்பட்டு நடித்தால் கூட இந்த மனுஷன் ஸ்டைல் பணியே சூப்பர் ஸ்டார் ஆயிட்டாரே என்ற எண்ணம் அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த காழ்ப்புணர்ச்சியில் தான் அவர் ரஜினிக்கு இன்னும் வாழ்த்து சொல்லவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால், நடிகர் கமலஹாசன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதை வென்ற போது கூட பெரிதாக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.