பெற்றோருக்கு தீராத சுமை! அதனால் மகன் செய்த அதிர்ச்சி செயல்!

0
62
Unbearable burden for parents! So the shocking act that the son did!
Unbearable burden for parents! So the shocking act that the son did!

பெற்றோருக்கு தீராத சுமை! அதனால் மகன் செய்த அதிர்ச்சி செயல்!

இந்த கொரோனா காலகட்டம் அனைவருக்குமே மிகக் கொடுமையாக தான் போனது. ஏனெனில் வேலை இல்லாத காரணத்தினால் பல குடும்பங்கள் கடனில் தள்ளப்பட்டன. யாருக்கும் நிதி நிலைமை சரியாக இல்லை. வசதியான குடும்பங்கள் வசதியாகவே இருக்கின்றன. நடுத்தர மற்றும் சராசரி குடும்பங்கள் அதன் மூலம் கொரோனாவின் மிகுந்த பாதிப்படைந்து உள்ளனர்.

அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக அந்த குடும்பங்களின் கஷ்டங்கள் யாருக்கு தெரியும். அவர்களைத் தவிர. எப்படி? எதற்கு? எல்லாம் செலவு செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் அவர்கள் முழித்து கொண்டு இருக்கிறார்கள். அதுவும் ஓட்டுனர்களின் குடும்பங்கள் கூட அந்த வகையில்மிகவும் பாதிப்பை சந்தித்து உள்ளன.

அதே போல் அரியாங்குப்பம் அடுத்த நோனங்குப்பம் டோல்கேட் அருகில், அரவிந்த் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். 43 வயதான இவர் மினி லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா காலத்தில் குடும்ப சூழ்நிலையை சரி செய்வதற்காக பல தனியார் வங்கிகளின் சுய உதவிக் குழுக்களின் மூலம் பல லட்ச ரூபாய் வரை இவர்களது குடும்பம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் கார்த்திகேயனின் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் அவர்களது குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்துள்ளது.

மேலும் தற்போது கடன் சுமையால் குடும்பம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. அதன் காரணமாக அவர்களது வீட்டிற்கு குழு நிர்வாகிகள் அல்லது வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வந்த பணத்தை திருப்பி செலுத்தும் படி தகராறு செய்து வந்தனர். இதையெல்லாம் பார்த்த கோசலையின் மகன் ரோகித் மிகவும் கவலையுடன் இருந்தார்.

நமது நிலை எப்போது மாறும் என்றும் சொல்லிய நிலையில் இருந்ததால்,  நேற்று காலை கார்த்திகேயன் தனது மனைவியை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் தனது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினரை அழைத்து மகனை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு பையனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.