சட்டத்தை மீறுதல் மன்னிக்க கூடாத குற்றம். -கமல் ட்விட்

0
150

தூத்துக்குடி: தந்தை, மகன் இறப்பு சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் பென்னிக்ஸ் என்பவர் செல்போன் கடை நடத்தி வந்தார். ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜயும் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல்துறை அழைத்துச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட கொடூரமான விசாரணையில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து காவலர்கள் இருவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் டுவிட்டரில் கருத்து கூறியதாவது; உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்’ என இவ்வாறு கூறியுள்ளார்.

பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை சிறு தவறுகளுக்காக கொடூரமான சித்ரவதைகளின் மூலம் இருவரின் உயிரை பறித்திருப்பது தமிழ்நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleகல்வியை போதித்தவர் காய்கறி விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்ட சம்பவம்!
Next articleஅக்டோபர் மாதத்தில் கொரோனா உச்சத்தை அடையும்! வெளியான அதிர்ச்சியளிக்கும் ஆய்வு