காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதியில் குன்றத்தூர் தாம்பரம் கூட்டுச்சாலையில் திருப்பெரும்புதூரில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது அப்பொழுது குன்றத்தூரில் இருந்து திருப்பெரும்புதூர் நோக்கி இரு சக்கர வாகனமானது வந்து கொண்டிருந்தது. அரசு பேருந்து நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது அதில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து திருப்பெரும்புதூர் போலீசா இருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து இந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரயாத பரிசோதனைக்காக திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இறந்த நபர் யார் என்பதை பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் உயிரிழந்தவர் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வினை குமார் (25). என்பது தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment