சித்திரை மாத அமாவாசையை ஒட்டி காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா சிறப்பு யாகம் நடைபெற்றது. உலக மக்களின் நன்மையை வேண்டி திரளான பக்தர்கள் வழங்கிய மிளகாயை யாக குண்டத்தில் போட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் ஸ்ரீபிருத்யங்கிரா தேவிக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மாதந்தோறும் அமாவாசை நாளன்று பிருத்திங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்று நிகும்பலா சிறப்பு யாகம் நடைபெறும்.
அதன்படி சித்திரை மாதம் அமாவாசையை ஒட்டி இன்று ஸ்ரீபிருத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. கோடை தொடங்கியுள்ள நிலையில் தற்போது மக்களுக்கு நோய் நொடிகள் பரவுவதால் உலக மக்கள் நன்மை வேண்டி நிகும்பலா சிறப்பு யாகம் நடைபெற்றது.
நிகும்பலா சிறப்பு யாகத்தை ஒட்டி அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழங்கிய காய்ந்த மிளகாய் வற்றலை யாகத்தீயில் இட்டு எரித்து கார நெடியில்லாத நிகும்பலா சிறப்பு யாகம் நடைபெற்றது.
நிகும்பலா சிறப்பு யாகத்தில் காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்து ஸ்ரீ பிருத்திங்கரா தேவியை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.