Breaking News

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி!

Kanyakumari Express train stops suddenly! Passengers suffer!

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி!

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வழக்கமாக சென்னையில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வந்தடையும்.அதே போல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்  ரயில் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.ஆனால் இந்த எக்ஸ்பிரஸ் 15நிமிடம் தாமதமாக காலை 5.20மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

அங்கு பயணிகளை இறக்கிய பின்னர் ரயில் புறப்பட தொடங்கியது.அப்போது ரயில் இன்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியும் ,பிற பெட்டிகளுடன் கப்ளிங் இணைக்கப்பட்டிருக்கும்.அந்த கப்ளிங் துண்டிக்கப்பட்டு தனியாக நின்றது.அதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ரயில்வே பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் ரயில் பழுது பார்க்கும் காரணத்தால் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனையடுத்து உடைந்த இணைப்புகொண்ட பெட்டியை தனியே கழற்றிய பிறகு இதர பெட்டிகளை இணைத்து காலை 7.40மணிக்கு ரயில் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றது.மேலும் கப்ளிங் ரயில் ஓடிகொண்டிருக்கும் பொழுது உடைந்திருந்தால் இன்ஜின் ஒரு பெட்டியுடன் தனியாக ஓடிகொண்டிருக்கும் இதர பேட்டிகள் அனைத்தும் நடு வழியிலேயே நின்றிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Comment