கர்நாடக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையால் தமிழகத்தில் பரபரப்பு!!
கர்நாடக அரசு காவேரியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. மேலும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற போது மேகதாது அணை கட்டப்படும் என்று தேர்தல் வாக்கு உறுதியை காங்கிரஸ் தெரிவித்தது. அதனை தொடர்ந்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.
அதனையடுத்து கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். இதையடுத்து அவர் கர்நாடக மாநில நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்த நிதியாண்டிற்காக பட்ஜெட் கூட்டத் தொடர் சில மாதங்கள் முன் நடைபெற்றது. இவர் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டமாக மேகதாது திட்டத்தை குறிப்பிட்டு இருந்தார்.
மேகதாது அணை திட்டம் பெங்களூர் மக்களின் குடிநீர் மற்றும் மின் உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகிறது. முதலில் அவர் மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மேகதாது அணை கட்டுவதற்கான தேவையான பட்ஜெட்டை அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அந்த திட்டம் பற்றிய அறிக்கை மற்றும் சுற்றுச்சுழல் தாக்கம் குறித்து மதிப்பீடுகள் ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது பற்றியும் அணை கட்டுவதற்கு அனுமதி பெறுவோம் என்றும், அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்திருந்தார். இந்த மேகதாது அணை கட்டுவதற்கு பல கட்சி தலைவர்களும், தமிழக மக்களும் கண்டம் தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணை கட்டும் பகுதிகளில் 29 வனத்துறை அதிகாரிகள் ஆய்வு பணியை தொடங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நிலம் அளவீடு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் கான்கிரீட் தூண்கள் அமைக்க வேண்டும் என்று வனத்துறை தெரிவித்ததுள்ளது. தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுத்து வருவது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.