தனக்கு வந்தா தான் தலைவலி தெரியும்! திமுகவை விமர்சிக்கும் நடிகை கஸ்தூரி
புதியதாக பதவியேற்றுள்ள திமுக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அதே போல கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த மாதிரி தற்போது எதுவும் நடந்துவிட கூடாது என தமிழக முதல்வர் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் என அனைவருக்கும் கட்டுபாடுகளை விதித்துள்ளார்.
அந்தவகையில் திமுக அரசின் செயல்பாடு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதே நேரத்தில் வரும் காலத்தில் இந்த கட்டுபாடுகளை கட்சியினர் கடைபிடிப்பர்களா? என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.அதே மாதிரி எதிர்கட்சியினர் இதெல்லாம் நாடகம் திமுக என்றாலே அராஜகம் என்றும்,சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற வகையில் தான் இருக்கும் என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்கட்சியினர் வரிசையில் நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரியும் இணைந்துள்ளார்.தமிழக அரசு அறிவித்துள்ள இந்த இ பாஸ் கட்டுபாடுகளை குறித்து தன்னுடைய விமர்சனத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது.
திடீர் சாம்பார் மாதிரி திடீர் சட்டம். தனக்கு வந்தாதான் தலைவலி தெரியும். ஆட்சிக்கு வந்தாதான் ஆர்வக்கோளாறு தெரியும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
DMK in opposition flayed center & ADMK govt that they make rules without figuring out implementation. What has DMK done now? How to describe this sudden epass rule ? திடீர் சாம்பார் மாதிரி திடீர் சட்டம். தனக்கு வந்தாதான் தலைவலி தெரியும். ஆட்சிக்கு வந்தாதான் ஆர்வக்கோளாறு தெரியும்
— Kasturi (@KasthuriShankar) May 18, 2021
அதாவது திமுக எதிர்கட்சியாக இருந்த போது அப்போதைய ஆளும் கட்சியை எப்படி விமர்சனம் செய்தது? அப்படி விமர்சனம் செய்த திமுக தற்போது செய்வதென்ன? என்ற வகையில் அவர் தெரிவித்துள்ள கருத்திற்கு சமூக ஆர்வலர்கள் ஆதரவு பெருகி வருகிறது.