சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்! விவசாயிகள் மகிழ்ச்சி..!!

0
149

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்! விவசாயிகள் மகிழ்ச்சி..!!

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மசோதா தாக்கல் செய்திருந்தார். இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் இரும்பு ஆலை, அலுமினியல் உருக்காலை, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டங்களுக்கு எந்த வகையிலும் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்பு வேளாண்மண்டல சட்ட மசோதா நிறைவேற்றத்தால் தமிழக காவிரி டெல்டா விவசாய நிலங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து பாதுகாப்பதுடன் மேலும், நல்ல விளைச்சல் கிடைக்கபோவதும் மற்றும் விவசாயிகளின் எதிர்கால வாழ்வாதாரம் உயரப்போவதும் உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, காவிரி டெல்டா பகுதிகளை உள்ளடக்கிய தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர், திருச்சி போன்ற மாவட்டங்களின்விவசாய நிலப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தொழில் நகரமான சில இடங்களை தமிழக அரசு
சிறப்பு வேளாண் மண்டல பகுதியாக அறிவிக்கவில்லை. இதை, டெல்டா பகுதிகளில் சில இடங்களை சேர்க்காமல் இருப்பதாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்விகேட்டதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleத்ரிஷா தன் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும்: தயாரிப்பாளர் ஜி சிவா ஆதங்கம் !
Next articleநான் கூட புர்கா அணிந்துகொள்ள தயார்:புர்கா சர்ச்சையில் வாய்திறந்த ரஹ்மான் !