கவினுடன் ஜோடி சேரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்தரா எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக காவியா என்பவர் முல்லை கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் புதிதாக நடிக்க உள்ள ஊர்க்குருவி என்ற திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக காவியா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை நயன்தாரா மற்றும் இவரது காதலரான விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவனின் உதவியாளர் அருண் பேட்ரிசியான் என்பவர் இயக்க உள்ளார்.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment