இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை!

0
87

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது, அது பல சமயங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது ஆனால் அதிமுக ஆட்சியின்போது போதும், போதும், என்ற அளவிற்கு மழை பெய்து விவசாயம் செழித்து ஓங்கும் இது அந்த இரு கட்சிகளின் ராசி என்ற அடிப்படையில் பொது மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது, அதுவே பல சமயங்களில் நடந்துள்ளது.

உதாரணமாக, கடந்த 2005 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலம் முடியும் தருவாயில் மிகப்பெரிய அளவில் மழை தமிழகம் முழுவதும் பொழிந்தது அதன் அடிப்படையில் ஆறு, குளங்கள், ஏரி, உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் மழைநீர் அதிகமாக இருந்தது. விவசாயம் செழித்தது ஆனால் கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெரிய அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் மழை பொழியவில்லை இதனால் தமிழக மக்கள் திமுகவை அப்போது பெரிதும் விமர்சனம் செய்தார்கள் .

அதோடு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கூட அதிமுக பிரச்சாரம் மேற்கொண்ட சமயத்தில் அதிமுகவின் அப்போதைய அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி ராசி ஆனவர் அவர் வெற்றி பெற்றால் தமிழகத்தின் மழை பொழிந்து விவசாயம் செழித்தோங்கும் என்ற அறிவியல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய தொடங்கினார்கள்.

இந்த சூழ்நிலையில், தற்போது திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கக்கூடிய சமயத்தில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது இது வழக்கத்திற்கு மாறாக இருக்கிறதே என்று பொதுமக்களும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு உள்ளார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

வரும் 24ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும் ,சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று வரும் 25ஆம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி ,தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.