கதையை மாத்துங்க! நடிகர் விஜய் மகன் Shocked… நடிகர் கவின் Rocked!

Photo of author

By Vijay

கதையை மாத்துங்க! நடிகர் விஜய் மகன் Shocked… நடிகர் கவின் Rocked!

Vijay

kavin sanjay movie drop

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து, நடிகர் கவின் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

சினிமா தொடர்பான படிப்பை லண்டனில் நிறைவு செய்துள்ள நடிகர் விஜயின் மகன் சஞ்சய், தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார்.

அவர் இயக்க உள்ள படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்க உள்ளதாகவும் அண்மையில் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வளரும் நாயகனாக தமிழ் சினிமாவில் வளம் வரும் நடிகர் கவினின் அடுத்தடுத்த படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அண்மையில் நடிகர் கவின் யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜயின் மகன் சஞ்சய் அவர் இயக்கக்கூடிய படம் குறித்து பேசியதாகவும், அந்த கதையில் சில மாற்றங்கள் செய்து விட்டு மீண்டும் சந்திக்கலாம் என்று நடிகர் கவின் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்த படம் குறித்து தன்னிடம் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் நடிகர் கவின் விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் நடிகர் விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

தற்போது நடிகர் கவின் நாயகனாக நடித்துள்ள ஸ்டார் வரும் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த ஸ்டார் ஸ்டார் படத்தின் இயக்குனர் இளனின் தந்தை ராஜா ராணி பாண்டியன் அண்மையில், தனது மகன் இயக்குனர் ஆனது குறித்து பெருமிதத்துடன் பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

அதில், “சினிமாவில் நான் தோல்வியுற்ற ஒரு நடிகன். நிறைய அவமானங்களை அனுபவித்திருக்கிறேன். இன்று என் மகன் இயக்குனராகி ஸ்டார் என்ற படத்தை இயக்கியுள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று என் கனவை என் மகன் நிறைவேற்றியுள்ளார்” என்று ராஜா ராணி பாண்டியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.