குழந்தைகள் ஆக்ட்டிவாக இருக்க.. இந்த சத்துப்பொடியை பாலில் கலந்து கொடுங்க!!

Photo of author

By Vijay

இன்றைய காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு தான்.ஒருசில குழந்தைகள் எப்பொழுதும் சோர்வுடன் இருப்பதற்கு காரணமும் இது தான்.குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது மிக முக்கியமான ஒரு விஷயமாகும்.

ஆனால் இப்பொழுது வளரும் குழந்தைகள் மொபைல் போன் பார்ப்பதில் நீண்ட நேரம் செலவிடுகின்றனர்.இதனால் அவர்களின் உடல் எடை கூடுவதோடு அதிக சோர்வடைந்துவிடுகின்றனர்.எனவே அவர்களை மீண்டும் ஆக்ட்டிவாக வைத்துக் கொள்ள இரசாயனம் இல்லாத சத்துப்பொடியை வீட்டிலேயே தயாரித்து கொடுங்கள்.

குழந்தைகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் சத்துப்பொடி தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:-

1)வேர்க்கடலை – ஒரு கப்
2)கருப்பு சுண்டல் – ஒரு கப்
3)முந்திரி – கால் கப்
4)பாதாம் பருப்பு – கால் கப்

தயாரிக்கும் முறை:

அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் அளவிற்கு வேர்கடலையை கொட்டி வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

அதேபோல் ஒரு கப் கருப்பு சுண்டல்,கால் கப் முந்திரி பருப்பு மற்றும் கால் கப் பாதாம் பருப்பை தனி தனியாக வறுத்து நன்றாக ஆறவிட வேண்டும்.

பிறகு மிக்சர் ஜாரில் இந்த பொருட்களை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை டப்பாவில் கொட்டி சேகரிக்க வேண்டும்.இந்த சத்துப்பொடியை ஒரு கிளாஸ் சூடான பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் எதிர்ப்பு சக்தி இயற்கையான முறையில் அதிகரிக்கும்.

கடைகளில் கிடைக்கும் இரசாயனம் மற்றும் கலப்படம் நிறைந்த சத்துமாவை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஆரோக்கியம் நிறைந்த சத்துப்பொடி தயாரித்து கொடுத்தால் அவர்கள் சோர்வின்றி நீண்ட நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்