பாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!! முதல் படத்திற்கே இவ்வளவு கோடி சம்பளமா??

Photo of author

By Parthipan K

பாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!! முதல் படத்திற்கே இவ்வளவு கோடி சம்பளமா??

Parthipan K

Keerthy Suresh to debut in Bollywood!! So much salary for the first film??

பாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!! முதல் படத்திற்கே இவ்வளவு கோடி சம்பளமா??

கீர்த்தி சுரேஷ் இந்திய திரைப்படத்தின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் 2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 2013 ம் ஆண்டு மலையாள படமான கீதாஞ்சலி என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.மேலும் தமிழில் 2013 ம் ஆண்டு என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக உள்ளார் என்பது குறிபிடத்தக்கது. அதன் பிறகு 2016 ம் ஆண்டு சிவகார்த்திகேயனுடன் இணைத்து ரஜினி முருகன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்த படம் இவரது சினிமா வாழ்க்கைக்கே மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

அதன் பிறகு தொடரி ,ரெமோ ,பைரவா உள்ளிட்ட பல படங்களை நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்க தொடங்கினார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகிய மகாநதி என்னும் படம் கீர்த்தி சுரேஷ் யார் என்பதை ஒட்டுமொத்த திரை உலகினருக்கே அடையாளம் காட்டியது. இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்று கொடுத்தது.

இவ்வாறு முன்னணி நடிகையாக வளம் வரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிலும் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லி தற்பொழுது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜாவான் என்கிற படத்தை இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பிறகு அட்லி நடிகர் வருண் தவானை வைத்து தெறி படத்தை ஹிந்தியில் இயக்க உள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மொழியில் இந்த படத்தில் தளபதி விஜய் மற்றும் சமந்தா அவர்கள் நடித்திருப்பார்.அதில் தளபதி விஜய் கதாபாத்திரத்தில் வருண் தாவன் மற்றும் சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் அவர் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்த படத்தின் லுக் டெஸ்ட்டுக்காக கீர்த்தி சுரேஷ் அவர்கள் மும்பை சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.