பிரபல தொகுப்பாளர் மர்மமாக உயிரிழப்பு!! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!!
சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பில் கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திருநங்கை அனன்யா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
கேரளாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக முதல் திருநங்கை, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அனன்யா. மேலும் இவர் கேரள மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர். அனன்யா வானொலி வர்ணனையாளர் மற்றும் ஒப்பனைக் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல மீடியாக்களில் பல பணிகளை மேற்கொண்டு வருபவர்.
இவர் டிவி பிரபலம் என்பதோடு நின்றுவிடாமல் பாலின சமத்துவத்துக்காக தொடர்ந்து போராடிவரும் ஒரு போராளி. கொல்லம் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் படிக்கும் காலத்திலேயே தன்னை மூன்றாம் பாலினத்தவர் என உணர்ந்தவர். மேலும் இது குடும்ப நபர்கள் மற்றும் நண்பர்களிடம் வெளிப்படுத்த, அவர்கள் இவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
இதன் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து பெங்களூருக்கு சென்று விட்டார். மேலும் திருநங்கைகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும். நான் வெற்றி பெற்றால் திருநங்கை துன்புறுத்துவதற்கு எதிராக சட்டம் இயற்றக் குரல் கொடுப்பேன் என்று கூறினார்.
திருநங்கைகளின் வாழ்வுக்கு வழிவகுக்கும் சட்டங்களை இயற்ற பாடுபடுவேன். சமூக மரியாதையும், அங்கீகாரத்தையும் அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தேர்தலில் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த இவர் வலுவான வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று வெங்காரா தொகுதியை தேர்ந்தெடுத்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மேலும் இவர கட்சியிலிருந்தே பல பிரச்சினைகள் வந்ததால் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். தற்போது கேரள மாநிலம் கொச்சியில் திருநங்கை அனன்யா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு அனன்யா பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் இவரின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது கவனிக்கத்தக்கதாகும்.