அப்ப வேணும்! இப்ப வேணாம்! அந்தர் பல்டி அடித்த முதலமைச்சர்! குஷியில் பாஜகவினர்!
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
இந்நிலையில், நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தயாரிக்கும் நிறுவனம் மொத்த தடுப்பூசிகளையும் மத்திய அரசிடம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு உள்ளது.
இதனால், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதாகக் கூறி, முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியதோடு, மாநில அரசுகளே தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம், மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் 50% தடுப்பூசிகளை மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50% தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்யலாம் என அனுமதி வழங்கியது.
இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அந்தர் பல்டி அடித்து மத்திய அரசே தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மாநில அரசுகளே வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என நாங்கள் கேட்டோம். ஆனால், தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் மாநில அரசுகளால் தடுப்பூசி வாங்க முடியாது. அதனால், மத்திய அரசே இலவசமாக தங்களுக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு காரணம், மத்திய அரசு வாங்கி பகிர்ந்தளிக்கும் போது, அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தது. தற்போது மாநில அரசுகளும் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளதால், தங்களது சொந்த நிதியில் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த போது, தடுப்பூசி வாங்குவதற்கான அனுமதியை மாநிலங்களுக்கு தரவேண்டும் என கூறியதையும், இப்போது மாநில அரசுகள் வாங்கிக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியதும், நீங்களே வாங்கித்தாருங்கள் என கூறுவதையும் வைத்து, பாஜக நிர்வாகிகள் விவாதங்களில் துளைத்தெடுக்கிறார்கள். மக்கள் படும் துயரத்தின்போதும் அரசியல் செய்வதா என கேள்வி எழுப்புகின்றனர்.