எளிமையாக நடந்த கேரள முதல்வரின் மகள் திருமணம்! தம்பதிக்கு குவியும் வாழ்த்து!

Photo of author

By Jayachandiran

எளிமையாக நடந்த கேரள முதல்வரின் மகள் திருமணம்! தம்பதிக்கு குவியும் வாழ்த்து!

Jayachandiran

Updated on:

கேரள முதல்வரான பினராயி விஜயனின் மகள் திருமணம் மிக எளிமையாக நடந்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கேரள சிபிஐஎம் – ல் இளைஞர் பிரிவு தலைவராக செயல்பட்டு வரும் முகமது ரியாஸ் என்பவரை பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் இன்று திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பெரிய அளவில் விழாக்கோலம் போல் இல்லாமல் மிக எளிமையாக முதல்வரின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மணப்பெண் வீணா விஜயன் பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் இயக்குனராக இருந்து வருகிறார்.

2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவைத் தேர்தலில் சிபிஎம் சார்பில் வேட்பாளராக முகமது ரியாஸ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். வீணா மற்றும் ரியாஸ் ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். 2015 ஆண்டு விவாகரத்து பெற்ற ரியாஸுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வீணாவுக்கும் முதல் திருமணத்தில் பிறந்த ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவரும் புதிய இல்வாழ்க்கையில் இணைந்துள்ளனர். தம்பதிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.