கேரளா தேங்காய் தொக்கு – அசத்தல் சுவையில் செய்யும் முறை..!

Photo of author

By Divya

கேரளா தேங்காய் தொக்கு – அசத்தல் சுவையில் செய்யும் முறை..!

தொக்கு வகைகள் அனைத்தும் மிகவும் சுவையாக இருக்கும். தொக்கு என்றால் தக்காளி, புளி, பூண்டு, இஞ்சி தொக்கு என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தேங்காய் வைத்து செய்யும் தொக்கு பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த தேங்காய் தொக்கு கேரளாவில் பேமஸான ஒன்று ஆகும். இதை ருசியாக செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேங்காய் தொக்கு செய்ய தேவைப்படும் பொருட்கள்…

*துருவிய தேங்காய் – 1 கப்
*சின்ன வெங்காயம் – 12(தோல் நீக்கியது)
*தேங்காய் எண்ணெய் – விருப்பதிக்கேற்ப
*வர மிளகாய் – 8
*இஞ்சி – துண்டு
*பூண்டு – 6 பற்கள்
*புளி – சிறிதளவு
*கருவேப்பிலை – 1 கொத்து
*உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை…

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் சின்ன வெங்காயம், வரமிளகாய், இஞ்சி, பூண்டு, புளி, கருவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் துருவிய தேங்காய் 1 கப் அளவு போட்டு பிரட்டி எடுக்கவும். அனைத்தும் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவைத்த பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தேவைப்பட்டால் தாளித்து கொள்ளலாம்.
இந்த தொக்கு சூடான சத்தத்திற்கு சிறந்த காமினேஷன் ஆகும்.