State

கேரளாவில் முதல் பலி! தொடர்ந்து வரும் கொரோனாவின் கோரதாண்டவம்! முடிவு எப்போது.?

கேரளாவில் முதல் பலி! தொடர்ந்து வரும் கொரோனாவின் கோரதாண்டவம்! முடிவு எப்போது.?

கேரள மாநிலத்தில் முதியவர் ஒருவர் சளி மற்றும் இருமல் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றபோது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்பால் தொற்று மட்டுமே இருந்த நிலையில் முதியவரின் இறப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா தினசரி அதிகபட்சமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை 834 ஆக பெருகியது.
தொடரும் உயிரிழப்புகளின் காரணமாக மத்திய அரசு மாநில அரசுகளை உடனடி மருத்துவ நடவடிக்கை எடுக்குமாறும், மக்களை பாதுகாப்பாக வீட்டிலே இருக்குமாறும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேர் இறந்துள்ளனர். கர்நாடகாவிலும் ஒருவர் இறந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய முதியவர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து, மருத்துவ பரிசோதனையில் இருமல், சளி, காய்ச்சல் இருந்த காரணமும் கொரோனா தொற்றும் இருப்பதை மருத்துவர் உறுதி செய்தனர். இதன் பின்னர் தனி அறையில் தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென முதியவர் இறந்தார். கேரளாவில் இதுவரை கொரோனாவில் 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு பேர் வெளிநாட்டவர் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment