கோடைவெயிலை சமாளிக்க வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்திய கேரள அரசு!

0
234
#image_title

கோடைவெயிலை சமாளிக்க வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்திய கேரள அரசு!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயில் அதிகமாக உள்ளது. வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. ஆனால் தமிழகத்தை விட கேரளாவில் தான் இந்த ஆண்டு வெயில் அதிகம் என்று கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டை விட கேரளாவில் இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக உள்ளதாம்.

இந்த கோடை வெயிலை பள்ளி மாணவர்கள் சமாளிக்கும் பொருட்டு கேரள அரசு புதிதாக திட்டம் ஒன்றை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தி உள்ளது. அதன்படி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் விதமாக வாட்டர் பெல் என்ற திட்டத்தை அம்மநில அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளிலும் காலை 10.30 மற்றும் மதியம் 2.30 மணிக்கு பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிக்க பெல் அடிக்கப்பட்டும். அந்த சமயத்தில் அனைத்து மாணவர்களும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்காக மாணவர்களுக்கு 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படுமாம்.

பொதுவாக பள்ளி செல்லும் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் இந்த கோடை வெயிலில் நிச்சயம் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து மாணவர்களை காக்கவே கேரள அரசு இப்படி ஒரு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிச்சயம் மாணவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பார்கள்.

இப்போதே வெயில் இப்படி அடிக்கிறது என்றால், இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால் நாம் என்ன ஆகப்போகிறோம் என்று தெரியவில்லை. இதனால் கேரளாவின் இந்த திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Previous articleபிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு!
Next articleசுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா!