சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா!

0
122
#image_title

சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா!

நேற்று(ஏப்ரல்8) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு செய்தது. இந்த போட்டியின் முலம் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

நேற்று(ஏப்ரல்8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் சுற்றில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன். ருத்ராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். பவர் பிளேயில் ஜடேஜா முதல் ஓவரை வீச வந்த பொழுது அவரின் சுழலில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழத் தொடங்கிய நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரன் குவிப்பு அப்படியே குறையத் தொடங்கியது.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 137 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டேரி மிட்செல் மெதுவாக விளையாடத் தொடங்கினார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்தார். 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டேரி மிட்செல் ஆட்டமிழக்க அதன். பின்னர் களமிறங்கிய ஷிவம் தூபே வழக்கம் போல அதிரடியாக விளையாடி 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ருத்ராஜ் கெய்க்வாட் 67 ரன்கள் சேர்க்க சென்னை அணி 17.4 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா அவர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்களின் பட்டியலில் எம்.எஸ் தோனி அவர்கள் 15 முறை வென்று முதல் இடத்தில் இருந்தார். தற்பொழுது ரவீந்திர ஜடேஜா அவர்கள் 15வது முறை ஆட்டநாயகன் விருதை வென்று எம்.எஸ் தோனி அவர்களின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா அவர்கள் 12 முறை ஆட்டநாயகன் விருதை வென்று மூன்றாவது இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் அவர்கள் 10 முறை ஆட்டநாயகன் விருதை வென்று நான்காவது இடத்தில் உள்ளார்.