கேரளா குழலப்பம்: மொறு மொறு சுவையில்…இப்படி செய்யுங்கள்!

0
139
#image_title

கேரளா குழலப்பம்: மொறு மொறு சுவையில்…இப்படி செய்யுங்கள்!

குழலப்பம் கேரளா மாநிலத்தில் செய்யப்படும் ஒருவித உணவுப் பண்டமாகும். இவை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த தின்பண்டம் சுவையாக செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – 1 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
சீரகம் – 2 ஸ்பூன்
பூண்டு பல் – 2
கருப்பு எள் – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

குழலப்பம் செய்யும் முறை…

வெங்காயம், பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். அடுத்து தேங்காயை 1 கப் அளவு துருவிக் கொள்ளவும்.

மிக்ஸி ஜார் எடுத்து அதில் வெங்காயம், பூண்டு, துருவிய தேங்காய் சேர்க்கவும். அடுத்து 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து 1 கப் அளவு தண்ணீரை சூடாக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான கிண்ணத்தில் 1 கப் அரிசி மாவு, அரைத்த விழுது சேர்த்து கலந்து விடவும். அடுத்து உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் அளவு, பெருங்காயத் தூள் சிட்டிகை அளவு, கருப்பு எள் 2 ஸ்பூன் மற்றும் சீரகம் 1 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து விடவும்.

பிறகு கொதிக்க வைத்த நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.

பிறகு இதை இரண்டாக மடித்து வைத்துக் கொள்ளவும். அனைத்து உருண்டைகளையும் இவ்வாறு செய்யவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் தயாராக உள்ள மாவை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். இந்த குழலப்பம் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.