மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த அரசு!! அதிர்ச்சியில் மக்கள்!!

0
148

மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த அரசு!! அதிர்ச்சியில் மக்கள்!!

நாடு முழுவதும் கோரோனோ பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும், முற்றிலுமாக சரியாகவில்லை. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்றும், நாளையும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொற்று குறைவால் நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாளுக்கு நாள் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த கேரளாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முற்றிலும் சரியாகவில்லை என்றாலும் கூட மோசமான நிலை இல்லை என்பதே இங்கு ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது.

கேரளாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்துகொண்டே வருவதையடுத்து ஊரடங்கு இன்றும் நாளையும் முழுவதுமாக அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கை அடுத்து தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாகவும், மது கடைகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவை இன்றும் நாளையும் இயங்காது என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்றும், சுகாதாரம், பத்திரிக்கை விநியோகம், மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி என்றும் தெரிவித்துள்ளது.

Previous articleதமிழகத்தில் விரைவில் 3ஆம் அலை?! இந்த மாவட்டங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்
Next articleஅதிபர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஓமன் அரசு கண்டனம்!