Kerala Recipe: கேரளா ஸ்டைலில் ‘முட்டை 65’ – கமகம சுவையில் செய்வது எப்படி?

0
244
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் ‘முட்டை 65’ – கமகம சுவையில் செய்வது எப்படி?

அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டையில் கேரளா ஸ்டைலில் சுவையான எக் 65 செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)முட்டை – 3
2)தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
3)தனி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
4)இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
5)மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
6)மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
7)அரிசி மாவு – 1 தேக்கரண்டி
8)சோள மாவு – 1 தேக்கரண்டி
9)எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
10)உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் மூன்று முட்டை மற்றும் சிறிது கல் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் தனி மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கொத்தமல்லி தூள்,இஞ்சி பூண்டு விழுது,எலுமிச்சைச் சாறு,அரிசி மாவு, சோள மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் விட்டு பேஸ்ட் போல் பிசைந்து கொள்ளவும்.

பின்னர் வேக வைத்த முட்டைகளை உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கி அந்த பேஸ்ட்டில் போட்டு நன்கு கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து பொரிக்க தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு மசாலாவில் ஊறவைத்த முட்டை துண்டுகளை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.இவ்வாறு செய்தால் முட்டை 65 மிகவும் சுவையாக இருக்கும்.

Previous articleஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் – அண்ணாமலை!
Next articleகுளிப்பதற்கு முன் தலைக்கு இதை தடவினால் முடி காடு போல அடர்த்தியாக வளரும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!