Kerala Recipe: கேரளா ஸ்டைலில் 3 மாதம் வரை கெட்டு போகாத மாங்காய் தொக்கு – எப்படி செய்தால் எச்சில் ஊறவைக்கும்!!
பச்சை மாங்காயில் சுவையான தொக்கு கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)பச்சை மாங்காய் – 1
2)எள் எண்ணெய் – 4 தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
4)மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
5)உப்பு – தேவையான அளவு
6)கடுகு – 1/2 தேக்கரண்டி
7)வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
8)பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு பச்சை மாங்காயை கழுவி சுத்தம் செய்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.அதன் விதையை நீக்கிவிட்டு ஒரு காய்கறி சீவல் கொண்டு மாங்காயை சீவிக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரம் எடுத்து அதில் சீவி வைத்துள்ள மாங்காயை போட்டு மஞ்சள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 மணி நேரம் ஊற விடவும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து 1/4 தேக்கரண்டி வெந்தயம் போட்டு வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு சட்டி வைத்து 4 தேக்கரண்டி எள் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
அதன் பிறகு ஊறவைத்த மாங்காய் துருவலை போட்டு வதக்கவும்.பிறகு அரைத்த வெந்தயப் பொடி,பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.மாங்காயில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும்.
இந்த தொக்கை ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமிக்கவும்.இவை சூடான சாதம்,சப்பாத்தி,தயிர் சாதம் ஆகியவற்றிற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.