Kerala Recipe: சுவையான வாழைக்காய் புட்டு கேரளா பாணியில் செய்வது எப்படி?
நேந்திர வாழைக்காயில் சுவையான புட்டு செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
*பச்சை வாழைக்காய் – 2
*வர மிளகாய் – 4
*சின்ன வெங்காயம் – 1/4 கப்(நறுக்கியது)
*பூண்டு – 5 பற்கள்
*கறிவேப்பிலை – 1 கொத்து
*தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி
*தேங்காய் துருவல் – 1/4 கப்
*கடுகு – 1/2 தேக்கரண்டி
*உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி
*கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*பெருங்காயம் – ஒரு சிட்டிகை அளவு
செய்முறை:-
முதலில் இரண்டு பச்சை வாழைக்காயை தோல் சீவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
விசில் நின்றதும் வாழைக்காயை ஆறவிட்டு காய் சீவல் கொண்டு சீவி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் சின்ன வெங்காயம்,பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பின்னர் கடுகு,உளுந்து,கடலை பருப்பு போட்டு பொரிய விடவும்.அதன் பின்னர் கறிவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு,வர மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும்
அதன் பிறகு சீவி வைத்துள்ள வாழைக்காய்,தேவையான அளவு உப்பு,சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து கிளறவும்.
இறுதியாக 1/4 கப் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வாழைக்காய் புட்டு ரெடி.