Kerala Recipe: ருசியான முட்டை பிரட்டல் கேரளா பாணியில் செய்வது எப்படி?

0
222
#image_title

Kerala Recipe: ருசியான முட்டை பிரட்டல் கேரளா பாணியில் செய்வது எப்படி?

புரதம் நிறைந்த முட்டையில் கேரளா ஸ்டைல் பிரட்டல் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)வேகவைத்த முட்டை – 5
2)தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
3)பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது)
4)தக்காளி – 1(நறுக்கியது)
5)பச்சை மிளகாய் – 2(நறுக்கியது)
6)கறிவேப்பிலை – 1 கொத்து
7)மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
8)கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
9)மிளகுதூள் – 1/2 தேக்கரண்டி
10)உப்பு – தேவையான அளவு
11)மல்லி தழை – சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி எடுக்கவும்.அதன் பின்னர் கொத்த மல்லித்தூள்,மிளகாய்த்தூள்,மிளகுதூள் போட்டு பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.

எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும் வேக வைத்த முட்டையை இரண்டாக நறுக்கி அதில் போட்டு பிரட்டி எடுக்கவும்.இறுதியாக வாசனையை கூட்ட சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.இவ்வாறு செய்தால் முட்டை பிரட்டல் மிகவும் சுவையாக இருக்கும்.

Previous articleஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க! 
Next articleஇந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!!