Kerala Recipe: சுவையான பால் பாயாசம் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

0
213
#image_title

Kerala Recipe: சுவையான பால் பாயாசம் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

பால்,பச்சரிசி கொண்டு சுவையான பாயாசம் தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பச்சரிசி – 1/2 கப்
2)பால் – 1 லிட்டர்
3)ஏலக்காய் – 2
4)வெள்ளை சர்க்கரை – 3/4 கப்
5)முந்திரி,திராட்சை – 5
6)நெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

1/2 கப் அளவு பச்சரிசியை ஒரு கிண்ணத்தில் போட்டு 2 முதல் 3 முறை அலசி சுத்தம் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு குக்கர் வைத்து ஊற வைத்த பச்சரிசியை போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பிறகு ஒரு லிட்டர் பால்,3/4 கப் வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பிறகு குக்கரை மூடி 3 விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.

விசில் நின்றதும் குக்கர் மூடியை திறந்து வேக வைத்த பால் பாயசத்தை ஒரு முறை கலந்து விடவும்.

பின்னர் வாசனைக்காக இரண்டு ஏலக்காயை தட்டி போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து சிறிது நெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் முந்திரி,திராட்சை போட்டு வறுத்து பாயாசத்தில் போட்டு கலந்து விட்டால் சுவையான பால் பாயாசம் தயார்.

Previous articleஉடலில் வீசும் கெட்டை வாடையை கட்டுப்படுத்த வேண்டுமா!! அப்போ இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்!!
Next articleகாலத்திற்கும் உதவும் பாட்டி வைத்தியம்!! இதை செய்தால் மருத்துவ செலவு இனி இல்லை!!