Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெள்ளை எலுமிச்சை தொக்கு – கமகம மணத்துடன் செய்வது எப்படி?

0
239
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெள்ளை எலுமிச்சை தொக்கு – கமகம மணத்துடன் செய்வது எப்படி?

எலுமிச்சம் பழம் கொண்டு கேரளா ஸ்டைலில் வெள்ளை எலுமிச்சை தொக்கு செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சம் பழம் – 15
2)கல் உப்பு – தேவையான அளவு
3)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
4)கடுகு – ஒரு தேக்கரண்டி
5)இஞ்சி(நறுக்கியது) – 2 தேக்கரண்டி
6)பூண்டு(நறுக்கியது) – 2 தேக்கரண்டி
7)பச்சை மிளகாய்(நறுக்கியது) – 10
8)பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
9)வெந்தயத் தூள் – 1/2 தேக்கரண்டி
10)சர்க்கரை – 1 தேக்கரண்டி
11)வினிகர் – 3 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் எலுமிச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் விதையை நீக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் எலுமிச்சம் பழ துண்டுகளை போட்டு கல் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து 2 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் கடுகு போட்டு பொரிய விடவும். அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு பச்சை வாடை நீங்கியதும் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், வெந்தயத் தூள் சேர்த்து கிளறவும். அதன் பிறகு உப்பில் ஊற வைத்துள்ள எலுமிச்சம் பழத் துண்டுகளை போட்டு கிளறவும்.

தொடர்ந்து சர்க்கரை மற்றும் வினிகர் சேர்த்து நன்கு வேக விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த வெள்ளை எலுமிச்சம் பழ ஊறுகாயை நன்கு ஆற விட்டு ஒரு பாட்டிலில் போட்டு சேமித்துக் கொள்ளவும். இந்த முறையில் ஊறுகாய் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

Previous articleமூலத்தை வேரோடு அறுத்து எறிய உதவும் “வெங்காயம் + வெந்தயம்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது!
Next articleகையில் பணம் புரள இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!