Kerala Recipe: விஷூ கஞ்சி கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

0
179
#image_title

Kerala Recipe: விஷூ கஞ்சி கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

கேரளாவில் புத்தாண்டு அன்று செய்யக் கூடிய ஸ்பெஷல் டிஸ் விஷூ கஞ்சி. சிவப்பு அரிசி, பச்சரிசி, தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த கஞ்சியை சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

1)சிவப்பு அரிசி – 1/2 கப்
2)பச்சரிசி – 1/2 கப்
3)தேங்காய் பால் – 2 கப்
4)மொச்சை கொட்டை – 1/4 கப்
5)தேங்காய் பால் – 1/2 கப்
6)உப்பு – தேவையான அளவு
7)துருவிய தேங்காய் – 1/4 கப்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து மொச்சை கொட்டை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும்.

ஒரு மணி கழித்து ஊறிய மொச்சை கோட்டையை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக விடவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் பச்சரிசி போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு அடுப்பில் ஒரு குக்கர் வைத்து பச்சரிசி மற்றும் சிவப்பு அரிசியை போட்டு 3 கப் அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

விசில் நின்றதும் வேக வைத்த அரிசியை மசிக்கவும். பிறகு தில் தேங்காய் பால் மற்றும் வேக வைத்த மொச்சை கொட்டை சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும். பிறகு துருவிய தேங்காய் சேர்த்து ஒரு கிளறு கிளறவும். இவ்வாறு செய்தால் விஷூ கஞ்சி சுவையாக இருக்கும்.

Previous articleஇந்த எண்ணையை பயன்படுத்தி விளக்கு போட்டால் வாழ்நாள் முழுவதும் கடன் என்ற பேச்சு இருக்காது!!
Next articleஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய “எலுமிச்சை + இஞ்சி” போதும்!