Kerala Recipe: உடனடி தேங்காய் துவையல் – செய்வது எப்படி?

0
117
#image_title

Kerala Recipe: உடனடி தேங்காய் துவையல் – செய்வது எப்படி?

தேங்காய் துவையல் கேரளா முறைப்படி செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் துருவல் – 1 கப்
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
*கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
*உளுந்து பருப்பு – 1 1/2 ஸ்பூன்
*காய்ந்த மிளகாய் – 8
*கறிவேப்பிலை – 1கொத்து
*புளி – சிறிதளவு
*உப்பு – தேவையான அளவு
*பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் எடுத்து வைத்துள்ள கடலை பருப்பு மற்றும் உளுந்து பருப்பு போட்டு பொன்னிறமாகும் வரை பொரிய விடவும்.

பிறகு காரத்திற்கு ஏற்ப வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அதன் பிறகு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும். சில நிமிடங்கள் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும்.

அடுத்து அதில் சிறிது பெருங்காயம், புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் தேங்காய் கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விருப்பப்பட்டால் கடுகு கருவேப்பிலையை தாளித்து தேங்காய் துவையலில் சேர்க்கலாம்.

இந்த தேங்காய் துவையல் சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.