Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பீட்ரூட் பத்திரி!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

Photo of author

By Divya

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பீட்ரூட் பத்திரி!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

Divya

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பீட்ரூட் பத்திரி!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து ரொட்டி(பத்திரி)செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி மாவு – 2 கப்
2)பீட்ரூட் – 1/2 கப்
3)உப்பு – தேவையான அளவு
4)நெய் – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு அகலமான கிண்ணத்தில் 2 கப் அரிசி மாவு போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து மாவு கலக்கவும்.

பிறகு 1/2 கப் பீட்ரூட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

இந்த பீட்ரூட் சாறை அரிசி மாவு கிண்ணத்தில் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

இந்த மாவை 15 நிமிடங்களுக்கு ஊறவிட்டு பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

இந்த உருண்டைகளை சப்பாத்தி போல் உருட்டி வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து தயாரித்து வைத்துள்ள சப்பாத்தி மாவை போட்டு தேவையான அளவு நெய் ஊற்றி சுட்டெடுத்து கொள்ளவும்.இவ்வாறு செய்தால் பீட்ரூட் பத்திரி மிகவும் சுவையாக இருக்கும்.