Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் நேந்திரங்காய் உப்பேரி! மொருமொரு கமகம சுவையில் செய்வது எப்படி?
கேரளாவில் அதிகம் விளையக் கூடிய நேந்திரங்காயில் ஒரு அருமையான பண்டம் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது.இதை செய்வது சுலபம் மற்றும் சுவை அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)நேந்திர வாழை(பச்சை) – 2
2)தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
3)உப்பு – தேவையான அளவு
4)மஞ்சள் – 1/2 ஸ்பூன்
செய்முறை:-
எடுத்து வைத்துள்ள நேந்திரங்காயின் தோலை நீக்கி விடவும்.ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி தோல் நீக்கிய நேந்திரங்காயை போட்டு கழுவிக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு காட்டன் துணியில் நேந்திரங்காயை வைத்து துடைத்து எடுக்கவும்.இதை ஒரு காய் சீவலில் வைத்து மெல்லிய வட்ட வடிவில் சீவிக் கொள்ளவும்.இல்லாதவர்கள் கத்தியில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து பொரிக்க தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள நேந்திரங்காயை அதில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை மிதமான தீயில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.இந்த மொருமொரு நேந்திரங்காய் உப்பேரியில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூவி கலந்து விடவும்.இந்த பண்டம் கேரளாவின் அடையாமளாக உள்ளது.