Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பலாக்காய் 65 ரெசிபி!! சுவையாக செய்வது எப்படி?

0
78
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பலாக்காய் 65 ரெசிபி!! சுவையாக செய்வது எப்படி?

பலாக்காயில் சுவையான சில்லி செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*பலாக்காய் – 1
*மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
*இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
*கொத்தமல்லித் தூள் – 1 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*அரிசி மாவு – 1 தேக்கரண்டி
*சோள மாவு – 1 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பலாக்காயை தோல் நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இதை குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கொத்தமல்லி தூள்,இஞ்சி பூண்டு விழுது,எலுமிச்சைச்சாறு,அரிசி மாவு, சோள மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் விட்டு பேஸ்ட் போல் பிசைந்து கொள்ளவும்.

பின்னர் வேக வைத்த பலாக்காய் துண்டுகளை அந்த பேஸ்ட்டில் போட்டு நன்கு கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து பொரிக்க தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு மசாலாவில் ஊறவைத்த பலாக்காய் துண்டுகளை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.இவ்வாறு செய்தால் பலாக்காய் 65 மிகவும் சுவையாக இருக்கும்.