Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெங்காய பக்கோடா ரெசிபி!

0
97
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெங்காய பக்கோடா ரெசிபி!

கேரளா ஸ்டைலில் வெங்காய பக்கோடா செய்து குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் பக்கோடா செய்தால் மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய வெங்காயம்
2)கடலை மாவு
3)அரிசி மாவு
4)தேங்காய் எண்ணெய்
5)உப்பு
6)மிளகாய் தூள்
7)பெருங்காயத் தூள்

செய்முறை:-

1/4 கிலோ பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை போட்டுக் கொள்ளவும். அதன் பின்னர் 100 கிராம் அளவு கடலை மாவு, 50 கிராம் அளவு அரிசி மாவை அதில் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.

பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி 5 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு தயார் செய்து வைத்துள்ள வெங்காய கலவையை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும். இவ்வாறு செய்தால் வெங்காய பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.